Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்!

பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்!
, திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (10:52 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்‌த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. ஆனால் சில நிமிடங்களிலேயே அதிக அளவு மாற்றத்துடன் இருந்தது.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 22.73 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14,679.42 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 16.10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4429.65 ஆக இருந்தது.

ஆசிய பங்குச் சந்தைகள் காலை‌யி‌லசரிவை சந்தித்தன. இதே போல் வெள்ளிக் கிழமை அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் பாதமான நிலை இருந்தது. உலக சந்தையில் கடந்த வாரம் குறைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவிலும் அதிக மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

வங்கி, ரியல் எஸ்டேட், பொதுத்துறை நிறுவனங்களின் பிரிவு அதிகரித்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி 1271 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 496 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 49 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 6.81 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,649.83 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4414.55 ஆக இருந்தது.

ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 63.34 சுமால் கேப் 68.27 பி.எஸ்.இ. 500- 25.41 புள்ளி அதிகரித்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் ரூ.2,686.71 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,273.99 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை வெள்ளிக்கிழமை ரூ.587.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,301.98 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.905.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை வெள்ளியன்று ரூ.396.34 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 587.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து வெள்ளிக் கிழமை வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.64,353.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் வெள்ளிக் கிழமை சுவிட்சர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் குறைந்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 57.20 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 51.70, நாஸ்டாக் 14.59, எஸ் அண்ட் பி500-7.07 புள்ளி குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பிலிப்பைன்ஸ் தவிர மற்றவைகளில் பாதகமான நிலை நிலவியது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 33.99, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 20.95, ஹாங்காங்கின் ஹாங்சாங் 202.97, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 31.29, ஜப்பானின் நிக்கி 74.35, தைவானின் தைவான் வெயிட் 30.71 சீனாவின் சாங்காய் காம்போசிட் 24.99 புள்ளி குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil