மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சரிந்த குறியீட்டு எண்கள் நண்பகல் 1 மணியளவில் படிப்படியாக அதிகரித்தது.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300.94 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,656.69 ஆக அதிகரித்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இந்திய நேரப்படி மாலை 5.05 மணியளவில் பிரிட்டனில் எப்டிஎஸ்இ100- 21.40 புள்ளி குறைந்தது.
அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 80.60 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4413.55 ஆக அதிகரித்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1551 பங்குகளின் விலை அதிகரித்தது, 1108 பங்குகளின் விலை குறைந்தது, 73 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 75.37, சுமால் கேப் 67.31, பி.எஸ்.இ100- 173.07, பி.எஸ்.இ 200-39.27, பி.எஸ்.இ-500 116.80 புள்ளி அதிகரித்தது.
இன்று நடந்த வர்த்தகத்தில் வாகன உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு தவிர மற்ற குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 229.40, சி.என்.எக்ஸ். ஐ.டி 99, பாங்க் நிஃப்டி 231.85, சி.என்.எக்ஸ்.100- 84.95, சி.என்.எக்ஸ். டிப்டி 80.75, சி.என்.எக்ஸ். 500- 67.55, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 0.60, மிட் கேப் 50- 37.45 புள்ளி அதிகரித்தது.
நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி 7.07%, சுல்ஜான் 7.04% ஸ்டேட் வங்கி 6.16% ஹெச்.டி.எப்.சி வங்கி 5.46% சீமென்ஸ் 5.02% அதிகரித்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 12.91%, டாடா பவர் 3.57%, மாருதி 2.35%, டாடா மோட்டார்ஸ் 2.04% ஹிந்துஸ்தான் லீவர் 1.96% குறைந்தது.