Newsworld Finance Market 0808 01 1080801007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் சரிவு!

Advertiesment
தேசிய மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (10:55 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்‌த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் பங்குகளை வாங்கியுள்ளன. இவர்கள் இன்று விற்பனை செய்வார்கள். அத்துடன் மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் கடுமையான பாதிப்பு இருப்பதால், அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.

நண்பகலுக்கு பிறகு நிலைமை மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 217.56 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,138.19 ஆக இருந்ததது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 61.95 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4271 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.40 மணி நிலவரப்படி 830 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1046 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 52 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 239.23 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,166.53 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 77.40 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4255.50 ஆக சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 26.20 சுமால் கேப் 28.70 பி.எஸ்.இ. 500- 60.91 புள்ளி குறைந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.3,815.27 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,320.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நேற்று ரூ.494.87 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,428.76 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,108.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.320.57 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 4,604.00 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63,766.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று சில பங்குச் சந்தைகளில் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 8.80 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 205.67, நாஸ்டாக் 4.17, எஸ் அண்ட் பி500-16.88 புள்ளி குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 23.85, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 38.61, ஹாங்காங்கின் ஹாங்சாங் 447.44, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 39.30, ஜப்பானின் நிக்கி 279.85, தைவானின் தைவான் வெயிட் 48.27, சீனாவின் சாங்காய் காம்போசிட் 43.44 புள்ளி குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil