மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.60ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.275ம் அதிகரித்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் தங்கத்தில் முதலீடு அதிகரிக்கத் துவங்கியுள்ளதன் காரணமாக நியூ யார்க் தங்கச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 907.20/908.40 ஆக இருந்தது 910.30/911.30 டாலர்களாக அதிகரித்துள்ளது.
வெள்ளியின் விலை அவுன்ஸ் ஒன்றிற்கு 17.50 / 17.56 ஆக இருந்தது 17.51/17.56 ஆக அதிகரித்துள்ளது.
விலை நிலவரம் :
தங்கம் (99.9) ரூ.12,610
தங்கம் (99.5) ரூ.12,555
வெள்ளி (10 கிராம்) ரூ.24,890