அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.36/37 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூயாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.42.50/51 ஆக சரிந்தது.
மாத இறுதியில் கச்சா எண்ணெய் இருப்பை அதிகரிக்க கச்சா எண்ணெய் முதலீட்டாளர்கள் அதிகளவில் எண்ணெய் வாங்குவதால் அதன் விலை சற்றே உயர்ந்துள்ளது. இதுவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.