மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் துவங்கும் போதை அதிகரித்த குறியீட்டு எண்கள் கடைசி வரை அதிகரித்தன. இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது ஐரோப்பா, அமெரிக்கா, மற்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 495.67 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14, 287.21 ஆக அதிகரித்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இந்திய நேரப்படி மாலை 4.55 மணியளவில் பிரிட்டனில் எப்டிஎஸ்இ100- 65.10 புள்ளி அதிகரித்து இருந்தது.
அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 123.70 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4313.55 ஆக அதிகரித்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1784 பங்குகளின் விலை அதிகரித்தது, 857 பங்குகளின் விலை குறைந்தது, 83 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 92.43 சுமால் கேப் 96.59 பி.எஸ்.இ100- 262.44 பி.எஸ்.இ 200-57.90 பி.எஸ்.இ-500 171.96 புள்ளி அதிகரித்தது.
இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி, ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், பெட்ரோலிய நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்களின் குறியீட்டு எண்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 274.45 சி.என்.எக்ஸ். ஐ.டி 135.90 பாங்க் நிஃப்டி 297.30 சி.என்.எக்ஸ்.100- 124.05 சி.என்.எக்ஸ். டிப்டி 110.85 சி.என்.எக்ஸ். 500- 99.30 சி.என்.எக்ஸ். மிட் கேப் 122 மிட் கேப் 50- 67.35 புள்ளி அதிகரித்தது.
இன்று நடந்த வர்த்தகத்தில் டாடா கம்யூனிகேஷன்ஸ் 9.43%, ஹெச்.டி. எப்.சி 7.83%, டாடா ஸ்டீல் 7.82% டாடா பவர் 7.03% ரிலையன்ஸ் இன்ப்ராக்சர்6.83%, ஹீரோ ஹோன்டா 6.42% ஹெச்.டி.எப்.சி வங்கி 6.29% பி.பி.சி.எல் 6.15%,ஸ்டெர்லைட் 5.35%, அதிகரித்து.
என்.டி.பி.சி 4.26%, நேஷனல் அலுமினியம் 1.33%, டாக்டர் ரெட்டி 1.22%, ஐ.டி.சி 0.69% குறைந்தது.