அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 பைசா உயர்ந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் முடிவடையும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 42.64/65 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.
மதிய நிலவரப்படி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 பைசா உயர்ந்து 42.54/55 ஆக காணப்பட்டது.
கச்சா எண்ணெயில் ஏற்பட்ட வீழ்ச்சி, பங்குச் சந்தையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது.