மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் துவங்கும் போது குறியீட்டு எண்கள் அதிக அளவு சரிந்தன.
ரிசர்வ் வங்கி பொருளாதார ஆய்வறிக்கையில் வங்கிகளின் ரொக்க கையிருப்பு, வட்டி விகிதத்தை அதிகரித்து இருப்பதாக அறிவித்தது. இதற்கு பிறகு பங்குச் சந்தை மேலும் சரிவை சந்தித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 14 ஆயிரத்திற்கும் குறைந்தது.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 557.57 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 13,791.54 ஆக சரிந்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஆஸ்திரியா, பிரிட்டன் தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன. இந்திய நேரப்படி மாலை 4.55 மணியளவில் பிரிட்டனில் எப்டிஎஸ்இ100- 9.80 புள்ளி அதிகரித்து இருந்தது.
அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 142.25 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4189.85 ஆக குறைந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 963 பங்குகளின் விலை அதிகரித்தது, 1672 பங்குகளின் விலை குறைந்தது, 72 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 142.20 ,சுமால் கேப் 81.97, பி.எஸ்.இ100- 289.18, பி.எஸ்.இ 200-66.38, பி.எஸ்.இ-500 199.11 புள்ளி குறைந்தது.
இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி, ரியல் எஸ்டேட், பெட்ரோலிய நிறுவனங்கள், நுகர்வோர் பொருட்கள் பொதுத்துறை நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்களின் குறியீட்டு எண்கள் அதிக அளவு குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 374.15, சி.என்.எக்ஸ். ஐ.டி 19, பாங்க் நிஃப்டி 497, சி.என்.எக்ஸ்.100- 147.45, சி.என்.எக்ஸ். டிப்டி 131.65, சி.என்.எக்ஸ். 500- 298.95, சி.என்.எக்ஸ். மிட் கேப் 163.10, மிட் கேப் 50- 73.30 புள்ளி குறைந்தது.
இன்று நடந்த வர்த்தகத்தில் நேஷனல் அலுமின்யம் 3.53%, ஹிந்த் ஜின்க் 3.38%, சீசா கோவா லிமிடெட் 2.02%, ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு விலை 2.86%, டி.சி.எஸ் 0.27%, இன்போசியஸ் 0.06 % அதிகரித்து.
பாரத் எலக்ட்ரிகல்ஸ் 16.28%, சன் டிவி நெட் 14.63%, இந்தியன் வங்கி 13,94%, பாங்க் ஆப் இந்தியா12.57%, ஹெச்.டி.எப்.சி வங்கி 8.71%, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 8.45%, ரிலையன்ஸ் இன்ஃப்ரா 7.99%, மாருதி சுஜிகி 7.03% குறைந்தது.