Publish Date: Tue, 29 Jul 2008 (14:03 IST)
Updated Date: Tue, 29 Jul 2008 (14:03 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 பைசா குறைந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் முடிவடையும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 42.55 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.
மதிய நிலவரப்படி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 பைசா உயர்ந்து 42.70/71 ஆக காணப்பட்டது.
எண்ணெய் இறக்குமதியாளர்கள் அதிகளவு டாலர்களை வாங்கியதாலும், ஆசிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவும் மும்பை பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் அதிக அளவு விற்றதாலும் டாலர் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.