Newsworld Finance Market 0807 28 1080728004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, திங்கள், 28 ஜூலை 2008 (10:50 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே குறைய ஆரம்பித்தன. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் அடிக்கடி மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி 1,058 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 646 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 50 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 15.36 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,290.30 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 11.15 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4323.00 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 30.48 சுமால் கேப் 53.29 பி.எஸ்.இ. 500- 12.38 புள்ளி அதிகரித்தது.

வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,916.66 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,482.39 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.565.73 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,108.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,411.18 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.302.41 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 3,210.23 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.62,372.23 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் வெள்ளிக் கிழமை சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 9.70 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 21.41, நாஸ்டாக் 30.42 எஸ் அண்ட் பி500-5.22 புள்ளி அதிகரித்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் தென் கொரியா, இந்தோனேஷியா, தைவான் ஆகியவற்றில் குறியீட்டு எண் குறைந்து இருந்தது. மற்றவைகளில் அதிகரித்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 5.84, தைவானின் தைவான் வெயிட் 134.46, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 11.71 புள்ளி குறைந்தது.

ஹாங்காங்கின் ஹாங்சாங் 89.57, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 3.13, சீனாவின் சாங்காய் காம்போசிட் 48.65, ஜப்பானின் நிக்கி 25.69 அதிகரித்து இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil