அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 பைசா உயர்ந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 42.15/16 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று காலை மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு எதிரொலியாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்தது.
மதிய நிலவரப்படி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 பைசா உயர்ந்து 42.21/23 ஆக காணப்பட்டது.