கடந்த பத்து வாரங்களில் இருந்த அளவுக்கு அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 26 பைசா உயர்ந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.08/09 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 26 பைசா குறைந்து 41.82 ஆக காணப்பட்டது.
இது கடந்த 10 வாரங்களில் இல்லாத உயர்வாகும்.