Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் உயர்வு!

பங்குச் சந்தைகளில் உயர்வு!
, செவ்வாய், 22 ஜூலை 2008 (11:38 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது அதிக வேறுபாடு இல்லாமல் இருந்தாலும், சிறிது நேரத்தில் எல்லா பிரிவு பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 ஆயிரம் என்ற அளவில் குறைந்த சென்செக்ஸ் இன்று 14 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் மத்திய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானித்தின் மீது, இன்று இரவு வாக்கெடுப்பு நடக்கிறது. நேற்று வரை மதில் மேல் பூனையாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்துள்ளது. இது மறைமுகமாக அரசுக்கு ஆதரவு தரும் நிலைதான்.

பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும் என்ற நிலை நிலவுவதால் பங்குச் சந்தையில் நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.

நேற்று மிக குறைந்த அளவே பங்குச் சந்தையில் ரொக்க பிரிவிலும், முன்பேர சந்தையிலும் வர்த்தகம் நடந்தது.
இன்று காலை குறியீட்டு எண்கள் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், நண்பகலுக்கு பிறகு மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

வங்கி, உலோக உற்பத்தி, மின் உற்பத்தி நுகர்வோர் பொருள் பிரிவு குறியீட்டு எண்கள் கணிசமாக அதிகரித்தன. வாகன உற்பத்தி பிரிவு மட்டும் குறைந்து இருந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 13,903.25 ஆகவும், நிஃப்டி 16 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4175.10 ஆக அதிகரித்தது.

கடந்த வாரம் கடைசி இரண்டு நாட்களில் அந்நிமுதலீட்டநிறுவனங்கள் கணிசமான அளவு பங்குகளை வாங்கின. இன்றும் இதே நிலை தொடருமா என்பது கேள்விக்குறியது.

அத்துடன் அந்நிய நாட்டு சந்தைகளில் சாதகமான நிலை இருந்தாலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்கொள்கின்றது. அரசியல் அரங்கின் போக்கு பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும். ஆதலால் இன்று பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 1427 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 482 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 59 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 265.66 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,115.70 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 80.50 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4240.00 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 108.01, சுமால் கேப் 98.80, பி.எஸ்.இ. 500- 113.03 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,145.34 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,207.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.62.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.944.22 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,175.18 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.230.96 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 3,626.06 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.62,788.06 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று ஸ்பெயின் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 27.90 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 29.23, நாஸ்டாக் 3.25 புள்ளி குறைந்தது. எஸ் அண்ட் பி500- மாற்றமில்லை.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஜப்பான் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் குறைந்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 12.31, ஹாங்காங்கின் ஹாங்சாங் 9.27 சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 20.01 சீனாவின் சாங்காய் காம்போசிட் 6.85

ஜப்பானின் நிக்கி 240.51, இந்தோனிஷியாவின் ஜகர்த்தை காம்போசிட் 12.74 புள்ளி அதிகரித்து இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil