Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 215, நிஃப்டி 67 புள்ளிகள் உயர்வு!

Webdunia
திங்கள், 21 ஜூலை 2008 (17:16 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 214.64 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,850.04 ஆக உயர்ந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இந்திய நேரம் மாலை 4.45 மணிப்படி ஸ்பெயின் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனில் எப்.டி.எஸ்.இ.-100 58.30 புள்ளி அதிகரித்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 67.35 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,159.50 ஆக அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,169 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,362 பங்குகளின் விலை குறைந்தது, 85 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 17.60, ப ி. எஸ ். இ.100- 90.67, பி.எஸ்.இ 200-19.86, பி.எஸ்.இ-500 56.26 புள்ளிகள் அதிகரித்தது. சுமால் கேப் 17.91 புள்ளிகள் குறைந்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் தகவல் தொழில் நுட்பம், நுகர்வோர் பொருட்கள் தவிர பங்கு விலைகள் குறிப்பிடதக்க அளவு அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 39, பாங்க் நிஃப்டி 212.35, சி.என்.எக்ஸ்.100- 58.35, சி.என்.எக்ஸ். டிப்டி 65.05, சி.என்.எக்ஸ். 500- 41.75, சி.என்.எக்ஸ். மிட் கேப் 23.90, மிட் கேப் 50- 15.25, சி.என்.எக்ஸ். ஐ.டி 19.05 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இந்தியன் வங்கி 13.55%, மேகஸ் இந்தியா 9.77%, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் 8.61, நேஷனல் அலுமினியம் கம்பெனி 8.27%, பவர் கிரிட் 5.63%, ஹீரோ ஹோன்டா 5.61%, சிப்லா 5.60% விலை அதிகரித்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments