அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 பைசா உயர்ந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் வெள்ளி கிழமை மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.76 /77 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 பைசா உயர்ந்து 42.65 /66 ஆக காணப்பட்டது.
பின்னர் வர்த்தகத்தில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டது. 42.65 ஆக இருந்த டாலர் மதிப்பு 42.77 ஆக இருந்தது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்கொள்வதாலும், பங்கு சந்தையில் முன்னேற்றமே ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணம் என பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.