மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 13,008.12 ஆகவும், நிஃப்டி 95 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3,944.90 ஆக குறைந்தது.
இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாமல், ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன.
பணவீக்கம், தொழிற் துறை உற்பத்தி குறைவு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடி போன்றவை பங்குச் சந்தையை கடுமையாக பாதித்து வருகின்றன. உள்நாட்டில் மட்டுமல்லாமல் ஈரான் மீது அமெரிக்கா படை தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் பங்குச் சந்தையை பாதித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி 520 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,093 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 46 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 323.57 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,006.94 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 95 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3,944.90 ஆக சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 49.68 சுமால் கேப் 40.70 பி.எஸ்.இ. 500- 104.55 புள்ளி குறைந்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,855.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,291.82 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.436.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.623.64 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.686.89 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.63.25 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 3,350.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.62,512.82 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 38.80 புள்ளி அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 45.35, எஸ்.அண்ட்.பி 500 -11.19, நாஸ்டாக் 26.21 புள்ளி குறைந்தது.
இன்று காலை ஆசிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 39.96, ஜப்பானின் நிக்கி 254.94, ஹாங்காங்கின் ஹாங்சாங் 711.02, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 52.77, சீனாவின் சாங்காய் காம்போசிட் 72.34 புள்ளி குறைந்தது.