Publish Date: Mon, 14 Jul 2008 (15:55 IST)
Updated Date: Mon, 14 Jul 2008 (15:55 IST)
மும்பை சந்தையில் இன்று தங்கம், வெள்ளி விலைகள் அதிகரித்தன.
இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.35 அதிகரித்தது. இதேபோல் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20 உயர்ந்தது.
மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தஙகம் 963.00 / 965.00 டாலரில் இருந்து, 963.00 / 965.00 டாலராக உயர்ந்ததது. வெள்ளியின் விலை 18.76 / 18.84 டாலரில் இருந்து 18.77 / 18.83 டாலராக அதிகரித்தது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த வார நிலவரத்தை விட, இன்று விலை அதிகரித்தது.
அதே நேரத்தில் டாலரின் மதிப்பு அதிகரித்த காரணத்தினால் தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களின் விலை அதிக அளவு உயராமல் இருந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,410
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,345
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,660.