Newsworld Finance Market 0807 14 1080714008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்

Advertiesment
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்
, திங்கள், 14 ஜூலை 2008 (10:55 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 114 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 13,355.97 ஆகவும், நிஃப்டி 19 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4030.40 ஆக இருந்தது.

தொழல் துறை உற்பத்தி குறைந்தது, அரசியல் நெருக்கடி வங்கிகளில் தொழில் வர்த்தக நிறுவனங்கள் கடன் வாங்குவது சரிவு போன்ற காரணங்களினால் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கும் போதே சரிவை சந்தித்தது. தகவல் தொழில் நுட்பம், வங்கி ரியல் எஸ்டேட் பிரிவு பங்குகள் சரிவை சந்தித்தன.

இத்துடன் அமெரிக்க, ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலையும், இந்திய பங்குச் சந்தையை பாதித்தது

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.35 மணி நிலவரப்படி 570 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1090 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 36 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 173.97 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,295.88 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 22 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4027.00 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 43.47, சுமால் கேப் 59.14 பி.எஸ்.இ. 500- 52.99 புள்ளி குறைந்தது.

இன்று பங்குச் சந்தை சரிவை சந்தித்தாலும், எல்லா பிரிவு பங்குகளின் விலைகளில் அடிக்கடி மாற்றம் ஏற்படும். பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.

வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,253.62 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,721.29 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.467.67 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.933.74 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.719.00 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.214.74 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 2,914.29 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து வெள்ளி‌க் கிழமை வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.62,076.30 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் வெள்ளிக் கிழமை எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 145.20 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 128.48, எஸ்.அண்ட்.பி 500 -13.90, நாஸ்டாக் 18.77 புள்ளி குறைந்தது.

இன்று காலை ஆசிய நாடுகளில் சீனா, பிலிப்பைன்ஸ் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட், 9.21 ஜப்பானின் நிக்கி 23.43, ஹாங்காங்கின் ஹாங்சாங் 282.60, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 45.65 புள்ளி குறைந்தது.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 9.83 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil