மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சிறிதளவே அதிகரித்தன.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 30 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,994.26 ஆகவும், நிஃப்டி 16 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4173.35 ஆக இருந்தது.
இந்த நிலை அதிக நேரம் நீடிக்கவில்லை. எல்லா பிரிவு பங்குகளின் விலையில் அடிக்கடி மாற்றம் இருந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் சாதகமாகவும், மற்றவைகளில் பாதகமாகவும் இருந்தது.
அதே போல் நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.
ஈரான் இஸ்ரேலை இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணையை நேற்று பரிசோதித்தது. அத்துடன் ஈரானில் உள்ள அணு உலைகள் பற்றிய பதட்டம் தொடர்ந்து நீடிப்பதால், கச்சா எண்ணெய் விலை குறையும் வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.
இதன் தாக்கமும் பங்குச் சந்தைகளில் இருக்கும். இன்று பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவுகளிலும் ஏற்ற இறக்கமாக இருக்க வாய்ப்புண்டு.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.25 மணி நிலவரப்படி 995 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 706 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 48 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 51.24 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,015.50 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 19.70 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4176.80 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 32.63 சுமால் கேப் 49.54 பி.எஸ்.இ. 500- 26.17 புள்ளி அதிகரித்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,501.15 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,936.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.435.54 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.825.04 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.685.82 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.139.22 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1,894.96 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.61,056.96 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 89.10 புள்ளி அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 236.77 எஸ்.அண்ட்.பி 500 -29.02 நாஸ்டாக் 59.55 புள்ளி குறைந்தது.
இன்று காலை ஆசிய நாடுகளில் சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் குறியீட்டு எண் குறைந்தது.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 8.07, ஜப்பானின் நிக்கி 59.02, ஹாங்காங்கின் ஹாங்சாங் 170.74 புள்ளி அதிகரித்தது.
சீனாவின் சாங்காய் காம்போசிட் 21.61 சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 20.91 புள்ளி குறைந்தது.