Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் உயர்வு!

பங்குச் சந்தைகளில் உயர்வு!
, புதன், 9 ஜூலை 2008 (11:38 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 537 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,886.89 ஆகவும், நிஃப்டி 50 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4139.25 ஆக இருந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகரித்தன. வங்கி, ரியல்எஸ்டேட், மின்உற்பத்தி பிரிவு பங்குகளின் விலை அதிகரித்து இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 49 இன் விலை அதிகரித்தும், ஒன்றின் விலை குறைந்தும் இருந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று எல்லா பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது. அதே போல் நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.

நியூயார்க் முன்பேர சந்தையில் ஆகஸ்ட் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விலை 136 டாலராக குறைந்தது. அத்துடன் நெருக்கடியில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் அடுத்த வருடமும் தொடரும் என்று அமெரிக்க ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

இத்துடன் இன்று ஆசிய பங்குச் சந்தையில் குறியீட்டு எண் அதிகரித்தது. இதனால் இந்திய பங்குச் சந்தையும் சாதகமான நிலையில் உள்ளது. இதே நிலை மாலை வரை நீடிக்குமா என்பது உறுதியாக கூறமுடியாது. பங்குச் சந்தைகளில் அடிக்கடி மாற்றம் இருக்க வாய்ப்புண்டு.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.50 மணி நிலவரப்படி 1689 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 399 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 39 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 426.00 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,775.65 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23.05 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4111.60 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 133.40 சுமால் கேப் 163.87 பி.எஸ்.இ. 500- 156.55 புள்ளி குறைந்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,873.67 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,199.94 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.326.27 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.863.73 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.436.46 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.427.27 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1,459.42 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.60,621.43 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 72.20 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 152.25 எஸ்.அண்ட்.பி 500 -21.39 நாஸ்டாக் 51.12 புள்ளி அதிகரித்தது.

இன்று காலை ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் அதிகரித்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 12.77, சீனாவின் சாங்காய் காம்போசிட் 83.88, ஜப்பானின் நிக்கி 178.61 ஹா‌ங்காங்கின் ஹாங்சாங் 589.13, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 25.88, சீனாவின் சாங்காய் காம்போசிட் 83.88 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil