Publish Date: Mon, 07 Jul 2008 (12:05 IST)
Updated Date: Mon, 07 Jul 2008 (12:03 IST)
மும்பை: மும்பை, தேசியப் பங்குச்சந்தைகளில் இன்று ஏற்ற நிலை இருந்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸ் குறியீடு 260 புள்ளிகள் உயர்ந்து 13,713.80 புள்ளிகளாக அதிகரித்தது.
அதன்பிறகு 11.37 நிலவரப்படி 300 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்தது. ஆனால் சற்று கடைசியாக 11.45 மணி நிலவரப்படி சற்றே குறைந்துள்ளது.
அதாவது 293.94 புள்ளிகள் அதிகரித்து 13,747.94 புள்ளிகளாக உள்ளது.
தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 11.48 மணி நிலவரப்படி சுமார் 89 புள்ளிகள் அதிகரித்து 4,105.55 புள்ளிகளாக உள்ளது.
விலை அதிகமான பங்குகள் வாங்குவது அதிகரித்ததால் குறியீடுகள் உயர்ந்து வருவதாக பங்குச் சந்தை தரகர்கள் தெரிவித்தனர்.