Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 360 புள்ளி உயர்வு!

சென்செக்ஸ் 360 புள்ளி உயர்வு!
, வெள்ளி, 4 ஜூலை 2008 (17:10 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இன்று எல்லா பிரிவிலும் ஏற்ற இறக்கம் இருந்தது.

பணவீக்கத்தின் அளவு உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களினால் பங்குச் சந்தை பாதிக்கப்படவில்லை என்பது ஆறுதளிகக்க கூடிய விஷயம்.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 359.89 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,454 ஆக உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் ஹாங்காங், இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் காலையில் குறியீட்டு அதிகரித்து இருந்தன. மாலை வரை குறையவில்லை. மற்ற பங்குச் சந்தைகளில் குறைந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் பாதகமான போக்கு நிலவியது. மாலை 4 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்டிஎஸ்இ-100 30.10 புள்ளி குறைந்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 90.25 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4016.00 ஆக உயர்ந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,696 பங்குகளின் விலை அதிகரித்தது, 898 பங்குகளின் விலை குறைந்தது, 83 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 116.48, சுமால் கேப் 100.50, பி.எஸ்.இ. 100-187.06, பி.எஸ்.இ. 200-42.93, பி.எஸ்.இ. 500- 133.75 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 236.55, சி.என்.எக்ஸ். ஐ.டி 17.85, பாங்க் நிஃப்டி 139.65, சி.என்.எக்ஸ்.100- 93.50, சி.என்.எக்ஸ். டிப்டி 76.85, சி.என்.எக்ஸ். 500- 81.45, சி.என்.எக்ஸ். மிட் கேப் 129.60, மிட் கேப் 50- 69.15 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று உலோக உற்பத்தி பிரிவு 75.91 புள்ளிகள் குறைந்தது.

பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 143.69, வாகன உற்பத்தி பிரிவு 54.65, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 679.27, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 64.93, மின் உற்பத்தி பிரிவு 132.6,1 வங்கி பிரிவு 173.04, ரியல் எஸ்டேட் பிரிவு 335.13, தகவல் தொழில் நுட்ப பிரிவு 29.87 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 38 பங்கு விலை அதிகரித்தது, 2 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 42 பங்குகளின் விலை அதிகரித்தது, 8 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி. பிரிவில் உள்ள 20 பங்குகளில் 12 பங்குகளின் விலை அதிகரித்தது, 8 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 9 பங்குகளின் விலை அதிகரித்தது, 3 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 43 பங்குகளின் விலை அதிகரித்தது, 7 பங்குகளின் விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil