கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதால் நாளை முதல் காய்கறி விலை குறையும் என்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்க முன்னாள் தலைவரும், நிர்வாக கமிட்டி ஆலோசகருமான செளந்தரராஜன் கூறினார்.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் கடுமையாக விலை உயர்ந்திருந்தது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிச் செல்லும் சில்லறை வியாபாரிகள் இரு மடங்கு கூடுதலாக வைத்து விற்பனை செய்கிறார்கள். இது இன்று மட்டும் அல்ல, இதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள் சில்லறை வியாபாரிகள்.
இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததையடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
இது குறித்து செளந்தரராஜன் கூறுகையில், லாரிகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதால் மார்க்கெட்டுக்கு வரும் லாரிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இதனால் காய்கறிகள் ஏராளமான வந்து குவியும். இதன் மூலம் விலைகள் கனிசமாக குறையும் என்றார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.07
கேரட் ரூ.40
பீட்ரூட் ரூ.10
சவ்சவ் ரூ.12
நூக்கோல் ரூ.15
முள்ளங்கி ரூ.10
வெள்ளரிக்காய் ரூ.08
பீன்ஸ் ரூ.20
கத்திரிக்காய் ரூ.08
அவரைக்காய் ரூ.16
புடலங்காய் ரூ.15
வெண்டைக்காய் ரூ.15
மிளகாய் ரூ.10
குடை மிளகாய் ரூ.50
முருங்கக்காய் ரூ.20
இஞ்சி ரூ.55
தேங்காய் (ஒன்று) ரூ.10, 12
சேனைக் கிழங்கு ரூ.20
சோம்பு ரூ.16
உருளைக்கிழங்கு ரூ.10
கோவக்காய் ரூ.10
பட்டாணி ரூ.50
சுரக்காய் ரூ.04
நாட்டு தக்காளி ரூ.10
பெங்களூர் தக்காளி ரூ.10
பூசணி ரூ.06
நாசிக் வெங்காயம் ரூ.10
சாம்பார் வெங்காயம் ரூ.18
மாங்காய் ரூ.15
பீர்க்கன்காய் ரூ.08
பாகற்காய் ரூ.15
காலிபிளவர் (ஒன்று) ரூ.10
பரங்கிகாய் ரூ.06
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.240)
இந்தியன் ஆப்பிள் ரூ.88
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.92
நாவல் ஆரஞ்சு ரூ.77
சாத்துக்குடி ரூ.25
கொய்யா ரூ.20
கருப்பு திராட்சை ரூ.30
பச்சை திராட்சை ரூ.60
கணேஷ் மாதுளை ரூ.40
காபூல் மாதுளை ரூ.50
செவ்வாழைப்பழம் ரூ.25
கற்பூரவள்ளி ரூ.16
ரஸ்தாளி ரூ.20
பச்சை வாழைப்பழம் ரூ.13
பப்பாளி ரூ.09
சப்போட்டா ரூ.25
கிரினி பழம் ரூ.15
தர்பூசணி ரூ.06
நேந்திரம் பழம் ரூ.30
பகனப்பள்ளி மாம்பலம் ரூ.36
அல்போன்சா மாம்பலம் ரூ.50
அத்திப்பழம் ரூ.38