Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 703 புள்‌ளிக‌ள் உயர்வு!

சென்செக்ஸ் 703 புள்‌ளிக‌ள் உயர்வு!
, புதன், 2 ஜூலை 2008 (17:38 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. ஆனால் சிறிது நேரத்திலேயே குறைய தொடங்கியது.

ஆனால் 1 மணிக்கு பிறகு நிலைமை சீராகி, எல்லா பிரிவு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரிக்க துவங்கின.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 702.94 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,664.62 ஆக உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் சீனா, சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் காலையில் குறியீட்டு அதிகரித்து இருந்தன. ஆனால் மாலையில் எல்லாவற்றிலும் குறியீட்டு எண் குறைந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு நிலவியது. மாலை 5 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்டிஎஸ்இ-100 84.19 புள்ளி அதிகரித்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 196.60 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4093.35 ஆக உயர்ந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1586 பங்குகளின் விலை அதிகரித்தது, 1094 பங்குகளின் விலை குறைந்தது, 57 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 169.44 சுமால் கேப் 121.69 பி.எஸ்.இ. 100-354 பி.எஸ்.இ. 200-80.33 பி.எஸ்.இ. 500- 241.95 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 359.70, சி.என்.எக்ஸ். ஐ.டி 99.55, பாங்க் நிஃப்டி 292.90, சி.என்.எக்ஸ்.100- 190.85, சி.என்.எக்ஸ். டிப்டி 173.60, சி.என்.எக்ஸ். 500- 149.20, சி.என்.எக்ஸ். மிட் கேப் 173.45, மிட் கேப் 50- 100.90 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 461.57, உலோக உற்பத்தி பிரிவு 744.83, வாகன உற்பத்தி பிரிவு 88.58, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 573.83, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 206.71, மின் உற்பத்தி பிரிவு 123.27, வங்கி பிரிவு 336.04, ரியல் எஸ்டேட் பிரிவு 515.26, தகவல் தொழில் நுட்ப பிரிவு 227.80, புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 44 பங்கு விலை அதிகரித்தது, 6 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ‌ஜூனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 45 பங்குகளின் விலை அதிகரித்தது, 5 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 16 பங்குகளின் விலை அதிகரித்தது, 4 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் அதிகரித்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 48 பங்குகளின் விலை அதிகரித்தது, 2 பங்குகளின் விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil