Publish Date: Wed, 02 Jul 2008 (15:32 IST)
Updated Date: Wed, 02 Jul 2008 (15:30 IST)
மும்பையில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது. கடந்த வாரம் அதிகரித்து வந்த விலை நேற்று குறைந்தது.
ஆனால் இன்று மீண்டும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.
மும்பையில் இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.515ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.165 அதிகரித்தது.
அந்நிய நாட்டு சந்தைகளிலும் விலை அதிகரித்தன.
நியூயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 940.20 / 941.20 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை 938.40 / 939.40 டாலர்.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பதால், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்கின்றனர். இதனால் அரிய உலோகங்களின் விலை உயர்வதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பார் வெள்ளியின் விலையில் அதிக மாற்றமில்லை வெள்ளி விலை 1 அவுன்ஸ் 18.07 / 18.13 டாலராக இருந்ததது. முந்தைய நாள் விலை விலை 18.08 / 18.13 டாலர்.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,190
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,130
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,265
Webdunia
Publish Date: Wed, 02 Jul 2008 (15:32 IST)
Updated Date: Wed, 02 Jul 2008 (15:30 IST)