Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லா‌ரிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் எ‌திரொ‌லி: கா‌‌ய்க‌றி ‌விலை ‌‌கிடு ‌கிடு உய‌ர்வு!

லா‌ரிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் எ‌திரொ‌லி: கா‌‌ய்க‌றி ‌விலை ‌‌கிடு ‌கிடு உய‌ர்வு!
, புதன், 2 ஜூலை 2008 (10:10 IST)
லா‌ரி‌க‌ளவேலை ‌நிறு‌த்த‌மகாரணமாகா‌‌ய்க‌றி ‌விலகடுமையாஉய‌ர்‌ந்து‌ள்ளது. இதனா‌ல் பொதும‌க்க‌ள் கடு‌ம் பா‌‌தி‌ப்பு‌க்கு ஆளா‌கி உ‌ள்ளன‌ர்.

டீசல் மீதான வரியை ரத்து செய்வே‌ண்‌டு‌ம், சேவை வரியை ரத்து செய்ய வே‌ண்டு‌மஎ‌ன்பதஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறகோ‌ரி‌க்கைகளவ‌லியுறு‌த்‌தி நாடு முழுவதும் நே‌ற்று ந‌‌ள்‌‌ளிரவமுத‌லலாரிகள் வேலை நிறுத்த‌‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்போரா‌ட்ட‌‌த்து‌க்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்து உள்ளதா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் ப‌ல்வேறு மாவ‌ட்‌ட‌‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து கொ‌ண்டு வர‌ப்படு‌ம் கா‌‌ய்க‌றி லா‌ரிக‌ள் அடியோடு ‌நி‌ன்று ‌வி‌ட்டது.

இதனா‌ல் நே‌ற்று இரவு 10 ம‌ணி‌‌க்கு செ‌ன்னை கோய‌ம்பேடு கா‌ய்க‌றி மா‌ர்‌க்கெ‌‌ட்டி‌ற்கு 300 லா‌ரிக‌‌ளி‌‌ல் கா‌ய்க‌றிக‌ள் வ‌ந்‌‌திற‌ங்‌கியது. 600 லா‌ரிக‌ள் வர வே‌ண்டிய ‌நிலை‌யி‌ல் 300 லா‌ரிக‌ள் ம‌ட்டுமே வ‌ந்து‌ள்ளது. இதனா‌ல் கா‌ய்க‌றி ‌விலைக‌ள் பல மட‌ங்கு உய‌ர்‌ந்‌திரு‌க்‌கிறது. கா‌ய்க‌றி வர‌த்து‌ம் அடியோடு பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இது கு‌றி‌த்து செ‌ன்னை கோய‌‌ம்பேடு கா‌ய்க‌றி ‌வியாபா‌ரிக‌ள் ச‌ங்க‌த் மு‌ன்னா‌ள் தலைவ‌ர் செள‌ந்‌திரராஜ‌ன் கூறுகை‌யி‌ல், லா‌ரிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் நே‌ற்‌றிரவே மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து கா‌ய்க‌றிகளை உடனடியாக அனு‌ப்பு‌ம் படி கே‌ட்டு‌க் கொ‌ண்டோ‌ம். 600 லா‌ரிக‌ள் வரவே‌ண்டிய அதே நேர‌த்‌தி‌ல் 300 ல‌ா‌ரிக‌ள் ம‌ட்டுமே வ‌ந்தது.

கா‌ய்க‌றிகளை வா‌ங்குவத‌ற்காக ‌சி‌ல்லறை ‌வியாபா‌ரிக‌ள் நே‌ற்‌றிரவே கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் கு‌வி‌ந்து ‌வி‌ட்டன‌ர். அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் உடனு‌க்குட‌ன் கா‌ய்க‌றிகளை வா‌ங்‌கி‌ச் செ‌‌ன்று ‌வி‌ட்டன‌ர்.

காலவரைய‌ற்ற இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் மேலு‌ம் கா‌ய்க‌றி ‌விலை உயர‌க் கூடு‌ம் எ‌ன்று அ‌ச்ச‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர் செள‌ந்‌திரராஜ‌ன்.

நே‌ற்று ‌வி‌‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட கா‌ய்க‌றி ‌விலை இ‌ன்று பா‌தி‌க்கு பா‌தி ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது. கு‌றி‌ப்பாக அவரை‌க்கா‌ய், கோ‌ஸ், கேர‌ட், முரு‌ங்க‌க்கா‌ய், வெ‌ண்டை‌க்கா‌ய், த‌க்கா‌ளி, ‌பீ‌ட்ரூ‌ட், ‌பீ‌ன்‌ஸ், தே‌ங்கா‌ய் ஆ‌கியவை கடுமையாக ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது.

வேலை‌ ‌நிறு‌த்த‌‌த்‌‌தி‌ற்கு மு‌ன்பு ‌வி‌‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட (அதாவது நே‌ற்று) கா‌ய்க‌றி ‌விலையு‌ம், இ‌‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் கா‌ய்க‌றி ‌விலையு‌ம் ஒரு ‌ப‌ட்டியலாக கொடு‌த்து‌ள்ளோ‌ம். அடை‌ப்பு‌‌க்கு‌ள் போட‌ப்‌ப‌ட்டு‌ள்ளது நே‌ற்றைய ‌விலை.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.10 (05)
கேர‌ட் ரூ.22 (15)
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.15 (10)
ச‌வ்ச‌வ் ரூ.15 (12)
நூ‌க்கோ‌ல் ரூ.15 (10)
மு‌‌ள்ளங்‌கி ரூ.12 (08)
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.10 (05)
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.15 (10)
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.14 (08)
அவரை‌க்கா‌ய் ரூ.28 (15)
புடல‌ங்கா‌ய் ரூ.12 (10)
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.20 (15)
மிளகா‌ய் ரூ.09 (09)
குடை ‌மிளகா‌ய் ரூ.80 (40)
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.25 (15)
இ‌‌ஞ்‌சி ரூ.80 (50)
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.12 (07)
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.15 (12)
சோ‌ம்பு ரூ.15 (13)
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.12 (09)
கோவ‌க்கா‌ய் ரூ.10 (10)
ப‌ட்டா‌‌ணி ரூ.80 (50)
சுர‌க்கா‌ய் ரூ.04 (04)
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.15 (08)
பெ‌‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி ரூ.15 (08)
பூச‌ணி ரூ.06 (04)
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.12 (10)
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.28 (20)
மா‌ங்கா‌ய் ரூ.10 (10)
பீ‌‌ர்‌க்க‌ன்கா‌ய் ரூ.08 (08)
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.15 (15)
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.15 (10)
பர‌ங்‌கிகா‌ய் ரூ.06 (06)


பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.220 (200)
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.90 (87)
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.100 (95)
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.75 (75)
சா‌த்து‌க்குடி ‌ ரூ.28 (24)
கொ‌ய்யா ரூ.25 (19)
‌‌கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.45 (30)
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.60 (60)
கணே‌ஷ் மாதுளை ரூ.40 (35)
காபூ‌‌ல் மாதுளை ரூ.50 (45)
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.25 (25)
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.18 (17)
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.20 (20)
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.13 (12)
ப‌ப்பா‌ளி ரூ.10 (09)
ச‌ப்போ‌ட்டா ரூ.22 (19)
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.12 (12)
த‌ர்பூச‌ணி ரூ.07 (05)
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.35 (31)
பகன‌ப்ப‌ள்‌ளி மா‌ம்பலம‌் ரூ.38 (34)
அ‌‌ல்போ‌ன்சா மா‌ம்பல‌ம் ரூ.55 (45)
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.40 (38)

Share this Story:

Follow Webdunia tamil