மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 13 ஆயிரம் புள்ளிகளுக்கும் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. இன்று நாள் முழுவதும் சீராக எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் குறைந்தன.
உலக சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம் உயர்வு, அரசியல் அரங்கில் அமெரிக்க அணு ஒப்பந்த பிரச்சனையால் இடது சாரிகளுக்கும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எழுந்துள்ள மோதல் போன்ற காரணங்களினால் இன்று பங்குச் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டது
அத்துடன் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் அதிகரித்து வரும் வர்த்தக இடைவெளியும் பங்குச் சந்தையில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 499.92 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 12,961.68 ஆக சரிந்தது.
இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலையே இருந்தது. காலையில் ஜப்பான், ஹாங்காங் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் அதிகரித்து இருந்தன. ஆனால் மாலையில் ஹாங்காங், இந்தோனிஷியா தவிர மற்ற பங்கு சந்தைகளில் குறியீட்டு எண் குறைந்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் பாதகமான போக்கே உள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்டிஎஸ்இ-100 146.40 புள்ளி குறைந்தது.
அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 143.80 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3896.75 ஆக குறைந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 406 பங்குகளின் விலை அதிகரித்தது, 2272 பங்குகளின் விலை குறைந்தது, 46 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 244.62 சுமால் கேப் 316.85 பி.எஸ்.இ. 100-278.58 பி.எஸ்.இ. 200-66.08 பி.எஸ்.இ. 500- 212.53 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 316.45, சி.என்.எக்ஸ். ஐ.டி. 92.95, பாங்க் நிஃப்டி 294.20, சி.என்.எக்ஸ்.100- 144, சி.என்.எக்ஸ். டிப்டி 148.15, சி.என்.எக்ஸ். 500- 127.55, சி.என்.எக்ஸ். மிட் கேப் 245.90, மிட் கேப் 50- 109.05 புள்ளி குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 275.44, உலோக உற்பத்தி பிரிவு 713.11, வாகன உற்பத்தி பிரிவு 176.15, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 336.38, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 204.45, மின் உற்பத்தி பிரிவு 95.45, வங்கி பிரிவு 332.39, ரியல் எஸ்டேட் பிரிவு 327.54, தகவல் தொழில் நுட்ப பிரிவு 69.87 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 3 பங்கு விலை அதிகரித்தது, 47 பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது, 47 பங்குகளின் விலை குறைந்தது.
சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது, 17 பங்குகளின் விலை குறைந்தது. பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் குறைந்தது.
நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 2 பங்குகளின் விலை திகரித்தது, 48 பங்குகளின் விலை குறைந்தது.