மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 136 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,356.22 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4279.15 ஆக உயர்ந்தது.
இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் சீனா தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. நேற்று ஐரோப்பிய, அமெரிக்க பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
அந்நிய நாடுகளில் பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தாலும், இந்திய பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நண்பகலுக்கு பிறகு பங்குச் சந்தை எதிரி திசையில் செல்ல வாய்ப்பு உண்டு.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடது சாரிகளுக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமையில் எவ்வித இறுதி முடிவும் நேற்று எடுக்கப்படவில்லை. இந்த நெருக்கடி நீடிக்கிறது.
இது பற்றி விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையை இன்று கூட்டியுள்ளார். இதில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்தும் பங்குச் சந்தையில் செயல்பாடுகள் இருக்கும்.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.45 மணி நிலவரப்படி 1516 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 428 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 53 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 173.27 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,393.34 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 31.80 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4284.45 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 103.31 சுமால் கேப் 132.80 பி.எஸ்.இ. 500- 75.06 புள்ளி குறைந்தது
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,746.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,110.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.363.71 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,325.81 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.795.94 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.529.87 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 11,088.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.57,583.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-31.40 புள்ளி அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 4.40 நாஸ்டாக் 32.98 எஸ் அண்ட் பி 500-7.68 புள்ளி அதிகரித்தது.
இன்று காலையில் 10.25 மணியளவில், ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சீனா, தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 5.28 ஜப்பானின் நிக்கி 43.77 சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 21.66, ஹாங்காங்கின் ஹாங்சாங் 97.93 புள்ளி அதிகரித்தது. சீனாவின் சாங்காய் காம்போசிட் 31.99 புள்ளி குறைந்தது.