Publish Date: Tue, 24 Jun 2008 (15:27 IST)
Updated Date: Tue, 24 Jun 2008 (15:27 IST)
மும்பையில் இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.380ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.240 குறைந்தது.
அந்நிய சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது. இதனால் மும்பை சந்தையிலும் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நியுயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 885.15/887.60 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 904.25/905.75 டாலர்.
இதே போல் பார் வெள்ளியின் விலை 16.84/16.88 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 17.39/17.45 டாலர்.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,370
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,310
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,105