Newsworld Finance Market 0806 24 1080624017_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை இன்று சென்செக்ஸ் நிஃப்டி
, செவ்வாய், 24 ஜூன் 2008 (11:23 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த பங்குச் சந்தையிலஇன்று காலை குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் இந்த போக்கு நாள் முழுவதும் நீடிக்கும் என்பது கேள்விக்குறியே. பங்குகளை அதிக அளவு விற்பனை செய்து இலாப கணக்கு பார்ப்பார்கள். எனவே இன்று பங்குகளின் விலையில் அதிக அளவு வேறுபாடு இருக்கும் என்று கருதப்படுகிறது.

காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 20 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,313.28 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 2 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4268.30 ஆக இருந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 1052 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1070 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 58 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 78.31 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,371.63 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 24.25 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4290.65 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 13.68, சுமால் கேப் 0.39, பி.எஸ்.இ. 500- 17.36 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,262.79 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,928.35 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.665.35 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.764.63 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.672.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.91.75 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 10,814.54 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.57,309.39 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று சிலவற்றில் குறியீட்டு எண் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-46.40 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 0.33, நாஸ்டாக் 20.35 புள்ளி சரிந்தது. எஸ் அண்ட் பி 500-24.09 புள்ளி அதிகரித்தது.

இன்று காலையில் 10.45 மணியளவில், ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சீனா, ஜப்பான், இந்தோனேஷிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. மற்றவைகளில் குறைந்தன.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 6.50, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 10.53, ஹாங்காங்கின் ஹாங்செங் 116.04 புள்ளி குறைந்தது.

ஜப்பானின் நிக்கி 10.06, சீனாவின் சாங்காய் காம்போசிட் 7.13 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil