Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 278 புள்ளிக‌ள் சரிவு!

சென்செக்ஸ் 278 புள்ளிக‌ள் சரிவு!
, திங்கள், 23 ஜூன் 2008 (17:16 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஆனால் எந்த நிலையிலும் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை எட்டவில்லை.

பணவீக்கம் உயரும் என்ற எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, காங்கிரசுக்கும் இடது சாரி கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி போன்ற காரணங்களினால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் உட்பட முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைமட்டுமல்லாது, ஆசிய பங்குச் சந்தைகளிலும் காலையில் இருந்து பாதகமான நிலையே நிலவியது.

ஐரோப்பிய பங்குச் சந்தையில் சாதகமான போக்கு நிலவியதால் 12 மணியளவில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் இது தொடர்ந்து நீடிக்கவில்லை. மறுபடியும் குறியீட்டு எண்கள் சரிய ஆரம்பித்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 277.97 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,293.32 ஆக குறைந்தது.

இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் ஹாங்காங் தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது. மாலையில் எல்லா பங்குச் சந்தைகளும் குறைந்தன. ஹாங்காங்கின் ஹாங்செங் 30.64 ஜப்பானின் நிக்கி 84.61 தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 15.41 சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 22.66 சீனாவின் சாங்காய் காம்போசிட் 71.32 புள்ளி குறைந்தது.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இத்தாலி, சுவிட்சர்லாந்து தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் அதிகரித்து இருந்தது. மாலை 4.55 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 27.30 புள்ளி அதிகரித்தது.

மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 81.15 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4266.40 ஆக சரிந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 425 பங்குகளின் விலை அதிகரித்தது, 2222 பங்குகளின் விலை குறைந்தது, 50 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 217.20 சுமால் கேப் 261.36 பி.எஸ்.இ. 100-196.06 பி.எஸ்.இ. 200-48.44 பி.எஸ்.இ. 500- 160.02 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 308.40, பாங்க் நிஃப்டி 164.85, சி.என்.எக்ஸ்.100- 92.05, சி.என்.எக்ஸ். டிப்டி 66.20, சி.என்.எக்ஸ். 500- 94.35, சி.என்.எக்ஸ். மிட் கேப் 232.75 மிட் கேப் 50- 92.30 புள்ளி குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவு மட்டும் 11.85 புள்ளி அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,450.96 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,450.27 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,131.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.567.44 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 56,643.83 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த மாதத்தில் மட்டும் ரூ.10,148.98 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 156.58, வங்கி பிரிவு 174.20, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 602.78, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 247.79, மின் உற்பத்தி பிரிவு 101.86, உலோக உற்பத்தி பிரிவு 671.73, ரியல் எஸ்டேட் பிரிவு 195.89, வாகன உற்பத்தி பிரிவு 119.45 புள்ளி குறைந்தது. தகவல் தொழில் நுட்ப பிரிவு மட்டும் 28.80 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 11 பங்கு விலை அதிகரித்தது, 38 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கின் விலையில் மாற்றம் இல்லை.

நிஃப்டி ஜூனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 5 பங்குகளின் விலை அதிகரித்தது, 45 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 7 பங்குகளின் விலை அதிகரித்தது, 13 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் குறைந்தன.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 2 பங்குகளின் விலை அதிகரித்தது, 48 பங்குகளின் விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil