Newsworld Finance Market 0806 23 1080623035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை உய‌ர்வு!

Advertiesment
தங்கம்
மும்பையில் இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.80ம் அதிகரித்தது.

மற்ற நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவல்களால், நகை உற்பத்தியாளர்கள் அதிக அளவு தங்கம் வாங்கியதால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூ யார்க் சந்தையிலும் வெள்ளிக் கிழமை தங்த்தின் விலை 1 அவுன்ஸ் 904.25 / 905.25 டாலராக அதிகரித்தது. இதற்கு முந்தைய நாள் விலை 901.35 / 902.75 டாலர்.

இதே போல் பார் வெள்ளியின் விலை 17.36 / 17.43 டாலரில் இருந்து 17.39 / 17.45 டாலராக உயர்ந்தது.

மற்ற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில், டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்ய துவங்கி உள்ளனர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,655
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,600
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,555.

Share this Story:

Follow Webdunia tamil