மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
பணவீக்க விகிதம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11.05 விழுக்காடாக உயர்ந்தது. அத்துடன் அடுத்து வரும் வாரங்களில் பணவீக்கம் 13 முதல் 14 விழுக்காடாக உயரும்.
ஏனெனில் ஜூன் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த பணவீக்க அளவுகோளில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மட்டும் பிரதிபலித்தது. இனி வரும் வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் ஏற்படும் போக்கு வரத்து செலவும் கணக்கிடப்பட்டு உணவு பொருட்கள் உட்பட விலை அதிகரித்த பொருட்களின் பட்டியல் அடிப்படையில் பணவீக்கம் அறிவிக்கப்படும். இது 13 முதல் 14 விழுக்காடாக உயரும் என்று தெரிகிறது.
இதனால் தொடர்ந்து இன்றும் பங்குகளை விற்கும் போக்கே இருக்கும் அத்துடன் காலையில் ஆசிய சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. வெள்ளிக்கிழமை அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் சரிவையே சந்தித்தன.
இது போன்ற காரணங்களுடன் அமெரிக் அணுசக்தி ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியாலும் பங்குச் சந்தையில் எதிர்மறையான போக்கே நிலவும். இதனால் இன்று பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் சரிவையே சந்திக்கும். ஐரோப்பிய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு, ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் தான் பங்குகளின் விலைகள் உயர வாய்ப்பு உண்டு.
காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 180 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,430.49 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 39 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4308.15 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.25 மணி நிலவரப்படி 390 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1436 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 35 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 140.80 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,430.49 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 38.65 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4308.90 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 118.04, சுமால் கேப் 137.24, பி.எஸ்.இ. 500- 85.47 புள்ளி குறைந்தது.
வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,460.96 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,450.27 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.999.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,131.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.567.44 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.563.86 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த மாதத்தில் வெள்ளிக் கிழமை வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 10,148.98 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.56,643.83 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வெள்ளிக் கிழமை குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-87.60 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 220.40, எஸ் அண்ட் பி 500-24.09, நாஸ்டாக் 55.97 புள்ளி சரிந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஹாங்காங் தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைத்து இருந்தன.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 14.42, ஜப்பானின் நிக்கி 67.22, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 20.36, சீனாவின் சாங்காய் காம்போசிட் 44.37 புள்ளி குறைந்தது. ஹாங்காங்கின் ஹாங்செங் 20.44 புள்ளி அதிகரித்தது.