Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!
, வியாழன், 19 ஜூன் 2008 (11:24 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

சிலி தவிர எல்லா நாட்டு பங்குச் சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தன. இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் குறைந்தன. வங்கி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் பிரிவு குறியீட்டு எண்கள் 2% அதிகமாக குறைந்தன.

நேற்று சென்செக்ஸ், நிஃப்டி குறைந்தாலும், மற்ற பிரிவுகள் அதிகரித்தது. ஆனால் இன்று எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 196 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,226.64 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 55 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4527 ஆக இருந்தது.

ஆசியாவில் எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தது. நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் பாதகமான நிலை இருந்தது. ஆனால் ஐரோப்பிய சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி 558 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1201 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 39 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 233.33 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,188.98 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 62.35 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4520.05 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 54.42, சுமால் கேப் 58.88, பி.எஸ்.இ. 500- 78.22 புள்ளி குறைந்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,471.36 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,906.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.435.00 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.791.87 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.598.23கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.193.64 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 8,551.32 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.55,046.18 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-105 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 131.24, எஸ் அண்ட் பி 500-13.12, நாஸ்டாக் 28.02 புள்ளி குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 37.02, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 49.28, சீனாவின் சாங்காய் காம்போசிட் 99.22, ஜப்பானின் நிக்கி 354.95 புள்ளி சரிந்தது.

Share this Story:

Follow Webdunia tamil