Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
, புதன், 18 ஜூன் 2008 (11:45 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது அதிகரித்து இருந்த குறியீட்டு எண்கள், அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே குறைய ஆரம்பித்தன.

கடந்த இரண்டு நாட்களாக பங்குகளின் விலை அதிகரித்தது. இதனால் இலாபம் பார்ப்பதற்காக காலையில் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் சென்செக்ஸ், நிஃப்டி அதிக வேறுபாடுகளுடன் இருந்தது.

வங்கி, தகவல் தொழில் நுட்ப பிரிவு பங்குகளின் விலை அதிகளவு குறைந்தன.

மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட குறைந்தன. காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 23 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,673.95 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி வேறுபாடு இல்லாமல் இருந்தது.

ஆசியாவில் எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் பாதகமான நிலை இருந்தது. ஆனால் ஐரோப்பிய சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி 1277 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 570 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 48 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 48.58 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,648.34 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4.20 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4648.80 ஆக இருந்தது.

ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 74.22, சுமால் கேப் 86.80, பி.எஸ்.இ. 500- 10.87 புள்ளி அதிகரித்தது.

அதே போல் இரண்டு பங்குச் சந்தைகளிலும் வங்கி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரிவு தவிர மற்ற பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தன. நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டின. இன்று இவை பங்குகளில் முதலீடு செய்தால் குறியீட்டு எண்கள், நேற்று போலவே குறியீட்டு எண்கள் உயர வாய்ப்புள்ளது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,463.20 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,320.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.142.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,008.21 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.588.13 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.420.08 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 8,116.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.54,611.18 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று குறியீட்டு எண்கள் அ‌திகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-67.30 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 108.78, எஸ் அண்ட் பி 500-9.21, நாஸ்டாக் 17.05 புள்ளி குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 13.58, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 11.95, ஹாங்காங்கின் ஹாங்செங் 292.52, சீனாவின் சாங்காய் காம்போசிட் 75.54, ஜப்பானின் நிக்கி 94.30 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil