மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஏற்ற இறக்கத்துடன் இருந்த குறியீட்டு எண்கள் 11 மணியளவில் அதிகரித்தன. எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் தொடர்ந்து அதிகரித்தன.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 301.08 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,696.90 ஆக உயர்ந்தது.
இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் ஜப்பான் தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. ஆனால் மாலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 28.30 புள்ளி அதிதரித்தது. ஜப்பானின் நிக்கி 6, சீனாவின் சாங்காய் காம்போசிட் 79.35, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 10.11 புள்ளி குறைந்தது.
இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது. மாலை 5 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 94.60 புள்ளி அதிகரித்தது.
மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 80.50 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4653.00 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1802 பங்குகளின் விலை அதிகரித்தது, 882 பங்குகளின் விலை குறைந்தது, 80 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 100.46, சுமால் கேப் 112.19, பி.எஸ்.இ. 100-171.80, பி.எஸ்.இ. 200-39.26, பி.எஸ்.இ. 500- 121.08 புள்ளி அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 268.70, சி.என்.எக்ஸ். ஐ.டி 44.85, பாங்க் நிஃப்டி 297.90, சி.என்.எக்ஸ்.100- 87.60, சி.என்.எக்ஸ். டிப்டி 68.45, சி.என்.எக்ஸ். 500- 73.80, சி.என்.எக்ஸ். மிட் கேப் 123.65, மிட் கேப் 50- 52.90 புள்ளி அதிகரித்தது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,297.68 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,845.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.794.64 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.501.59 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 54,753.54 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 143.12, வங்கி பிரிவு 311.54, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 260.07, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 225.73, மின் உற்பத்தி பிரிவு 35.20, உலோக உற்பத்தி பிரிவு 142.09, ரியல் எஸ்டேட் 228.32, தகவல் தொழில் நுட்ப பிரிவு 26.85, வாகன உற்பத்தி பிரிவு மட்டும் 50.89 புள்ளி அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 38 பங்கு விலை அதிகரித்தது, 12 பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 43 பங்குகளின் விலை அதிகரித்தது, 7 பங்குகளின் விலை குறைந்தது.
சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 15 பங்குகளின் விலை அதிகரித்தது, 5 பங்குகளின் விலை குறைந்தது.
பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலை அதிகரித்தது.
நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 42 பங்குகளின் விலை அதிகரித்தது, 8 பங்குகளின் விலை குறைந்தது.