Newsworld Finance Market 0806 16 1080616008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் உயர்வு!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, திங்கள், 16 ஜூன் 2008 (10:55 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

ரியல்எஸ்டேட், உலோக உற்பத்தி வங்கி பிரிவு பங்குகள் அதிக அளவு உயர்ந்தன. இந்த பிரிவு பங்குகள் கடந்த வாரம் அதிகளவு பாதிக்கப்பட்டது.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 279 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,468.29 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 87 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,603.30 ஆக இருந்தது.

ஆசியாவில் எல்லா நாட்டு சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் வெள்ளிக் கிழமை முன்னேற்றம் காணப்பட்டது.

கடந்த நான்கு நாட்களாக பாதிப்பிற்குள்ளான ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போதே சாதகமான நிலை நிலவுகிறது.

இந்திய பங்குச் சந்தைகளிலும் இன்று எல்லா பிரிவு பங்குகளின் விலை அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர். பல பங்குகளின் விலை குறைவாக இருப்பதால் முதலீட்டு நிறுவனங்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பார்கள். இதனால் பாதிப்பு இருக்காது என்று நம்பப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.45 மணி நிலவரப்படி 1581 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 388 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 38 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 299.61 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,489.29 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 82.95 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4600.05 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 102.27, சுமால் கேப் 125.97, பி.எஸ்.இ. 500- 111.96 புள்ளி அதிகரித்தது.

வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,724.95 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,841.46 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.116.51 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,086.03 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.628.70 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.457.33 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.54,205.70 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வெள்ளிக் கிழமை சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சிலவற்றில் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-12.30 புள்ளி உயர்ந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 165.77, எஸ் அண்ட் பி 500-20.16, நாஸ்டாக் 50.15 புள்ளி அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 373.93, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 17.66, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 58.49, ஹாங்காங்கின் ஹாங்செங் 609.09, சீனாவின் சாங்காய் காம்போசிட் 30.35 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil