Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 296 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 296 புள்ளிகள் உயர்வு!
, புதன், 11 ஜூன் 2008 (17:36 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வந்த சரிவு இன்று மாறியது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பங்குகளின் விலைகளில் மாற்றம் இருந்தாலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 296.07 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,185.32 ஆக உயர்ந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் சாதகமான போக்கு இருந்தது. ஆனால் மாலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 47.92, சீனாவின் சாங்காய் காம்போசிட் 48.09 புள்ளி குறைந்தது. ஜப்பானின் நிக்கி 162.31, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 7.29 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகியவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டன், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகியவற்றில் குறைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 6.40 புள்ளிகள் குறைந்தது.

மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 73.80 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,523.60 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,830 பங்குகளின் விலை அதிகரித்தது, 809 பங்குகளின் விலை குறைந்தது, 77 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 86.89, சுமால் கேப் 126.14, பி.எஸ்.இ. 100-129.36, பி.எஸ்.இ. 200-29.91, பி.எஸ்.இ. 500- 93.37 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 151.20, சி.என்.எக்ஸ். ஐ.டி. 53.70, பாங்க் நிஃப்டி 156.90, சி.என்.எக்ஸ்.100- 72.80, சி.என்.எக்ஸ். டிப்டி 49.30, சி.என்.எக்ஸ். 500- 61.75, சி.என்.எக்ஸ். மிட் கேப் 88.40, மிட் கேப் 50- 40.05 புள்ளி அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,310.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின, ரூ.4,220.32 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,473.20 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின, ரூ.1,176.61 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.52,660.73 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 141.02, மின் உற்பத்தி பிரிவு 45.96, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 112.93, வங்கி பிரிவு 156.09, தகவல் தொழில் நுட்ப பிரிவு 73.47, உலோக உற்பத்தி பிரிவு 134.88, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 283.92, ரியல் எஸ்டேட் 173.05 வாகன உற்பத்தி பிரிவு 32.73 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 33 பங்கு விலை அதிகரித்தது, 17 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 41 பங்குகளின் விலை அதிகரித்தது, 9 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி. பிரிவில் உள்ள 20 பங்குகளில் 14 பங்குகளின் விலை அதிகரித்தது, 6 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், எல்லா பங்குகளின் விலைகளும் அதிகரித்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 39 பங்குகளின் விலை அதிகரித்தது, 11 பங்குகளின் விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil