Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!
, புதன், 11 ஜூன் 2008 (11:08 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த நிலை இன்று மாறியது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே போது பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சென்செக்ஸ் 15 ஆயிரம் புள்ளிகளையும், நிஃப்டி 5,000 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டியது.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது ஆசிய பங்குச் சந்தைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது.

பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் இந்த முன்னேற்றம் இறுதி வரை இருப்பது சந்தேகத்திற்கு உரியது என்ற கருத்தும் பங்குச் சந்தை வட்டாரங்களில் நிலவுகிறது.

சர்வதேச எரிபொருள் ஆணையம் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் தேவை குறையும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் விலையை குறைக்கவும் உலக அளவில் பல்வேறு மட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்காது என்று தெரிகிறது.

இவை முதலீட்டாளர்களின் பார்வை பண்டக சந்தையில் இருந்து, பங்குச் சந்தைக்கு திருப்பும். இது போன்ற காரணங்களினால் பங்குச் சந்தை அதிக இழப்பை சந்திக்காது என தெரிகிறது.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 202 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,091.18 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 57 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4506.70 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.30 மணி நிலவரப்படி 1346 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 434 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 50 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 216.34 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,105.59 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 57.20 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4506.60 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 91.87, சுமால் கேப் 107.79, பி.எஸ்.இ. 500- 81.89 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,310.16, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,220.32 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.910.16 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,473.20, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,176.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.296.39 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.52,660.73 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-50.30 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 9.44 புள்ளி அதிகரித்தது. ஆனால் எஸ் அண்ட் பி 500- 3.32, நாஸ்டாக் 10.52 புள்ளி குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 122.14, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 30.16, ஹாங்காங்கின் ஹாங்செங் 71.91, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 5.24 புள்ளி அதிகரித்து இருந்தது. சீனாவின் சாங்காய் காம்போசிட் மட்டும் 16.37 புள்ளி குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil