Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிவு!
, திங்கள், 9 ஜூன் 2008 (17:14 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சரிந்த குறியீட்டு எண்கள் தொடர்ந்து குறைந்து வந்தன. காலை 11 மணியளவில் நிப்டி 218 புள்ளிகள் குறைந்தது.

அதற்கு பிறகு சிறிது அதிகரிக்க துவங்கியது. பின் அதிக மாற்றத்துடன் இருந்த பங்குச் சந்தை இறுதியில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 126 புள்ளிகளும், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 726 புள்ளிகள் குறைந்தது.

காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 15 ஆயிரத்திற்கும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 506.08 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 15,066.10 முடிந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. ஜப்பானின் நிக்கி 308.06, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 23.35 புள்ளிகள் குறைந்தன.

அதே நேரத்தில் இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பிரிட்டன், ஜெர்மனி பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மற்ற பங்குச் சந்தைகளில் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 9.50 புள்ளிகள் அதிகரித்தது.

மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 126.85 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,500.95 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 474 பங்குகளின் விலை அதிகரித்தது, 2170 பங்குகளின் விலை குறைந்தது, 49 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 179.82, சுமால் கேப் 279.51, பி.எஸ்.இ. 100-245.62, பி.எஸ்.இ. 200-57.28, பி.எஸ்.இ. 500- 181.20 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 310.60, சி.என்.எக்ஸ். ஐ.டி 211.95, பாங்க் நிஃப்டி 190.85, சி.என்.எக்ஸ்.100- 127.60, சி.என்.எக்ஸ். டிப்டி 89.95, சி.என்.எக்ஸ். 500- 118.70, சி.என்.எக்ஸ். மிட் கேப் 172.40, மிட் கேப் 50- 79.70 புள்ளி குறைந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,760.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,683.77 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,089.55 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.689.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 50,405.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 80.74, மின் உற்பத்தி பிரிவு 80.74, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 196.77, வங்கி பிரிவு 232.96, தகவல் தொழில் நுட்ப பிரிவு 193.61, உலோக உற்பத்தி பிரிவு 125.78, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 397.01, ரியல் எஸ்டேட் 458.08, வாகன உற்பத்தி பிரிவு 103.68 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 10 பங்கு விலை அதிகரித்தது, 40 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது, 46 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி. பிரிவில் உள்ள 20 பங்குகளில் 1 பங்குகளின் விலை அதிகரித்தது, 19 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது, 46 பங்குகளின் விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil