Publish Date: Mon, 09 Jun 2008 (15:15 IST)
Updated Date: Mon, 09 Jun 2008 (15:13 IST)
மும்பையில் இன்று பார் வெள்ளி, தங்கம் வாங்குவதில் நகை உற்பத்தியாளர்கள், தொழில் துறையினர் ஆர்வம் காட்டாத காரணத்தினால் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. இன்று காலை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.10 குறைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, பார் வெள்ளியின் விலை கிலோ ரூ.24,665 என்ற அளவில் இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.12,570, 22 காரட் தங்கத்தின் விலை ரூ.12,510 என்ற அளவில் இருந்தது.
நியுயார்க் சந்தையில் வெள்ளிக் கிழமை தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 904.10 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை 896.80/898.20 டாலர். அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை 17.51/17.57 டாலரில் இருந்து 17.50/17.55 டாலராக குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,570
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,510
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,665.