Publish Date: Mon, 09 Jun 2008 (10:20 IST)
Updated Date: Mon, 09 Jun 2008 (10:20 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி விலைகள் கடுமையாக உள்ளது. இதற்கு காரணம் லாரிகள் தங்கள் வாடகையை கடுமையாக உயர்த்தி உள்ளதால் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலைகள் உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
கடந்த 4 ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தது.
இந்த விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் வாடகையை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். சென்னை கோயம்பேட்டுக்கு வரும் லாரிகள் குறைந்துள்ளது விலைகள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்த செளந்திரராஜன், முன்பு ஒரு நாளைக்கு 200 முதல் 250 லாரிகள் கோயம்பேட்டுக்கு வரும். தற்போது 170 லாரிகள் மட்டுமே வருகின்றன என்றார்.
கோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், அவரைக்காய், சாம்பார் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. ரூ.17க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பார் வெங்காயம் தற்போது ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மற்ற காய்கறி விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.05
கேரட் ரூ.20
பீட்ரூட் ரூ.15
சவ்சவ் ரூ.15
நூக்கோல் ரூ.10
முள்ளங்கி ரூ.10
வெள்ளரிக்காய் ரூ.06
பீன்ஸ் ரூ.25
கத்திரிக்காய் ரூ.10
அவரைக்காய் ரூ.20
புடலங்காய் ரூ.12
வெண்டைக்காய் ரூ.12
மிளகாய் ரூ.18
குடை மிளகாய் ரூ.30
முருங்கக்காய் ரூ.20
இஞ்சி ரூ.50
தேங்காய் (ஒன்று) ரூ.06
சேனைக் கிழங்கு ரூ.14
சோம்பு ரூ.16
உருளைக்கிழங்கு ரூ.09
கோவக்காய் ரூ.10
பட்டாணி ரூ.50
சுரக்காய் ரூ.04
நாட்டு தக்காளி ரூ.10
பெங்களூர் தக்காளி ரூ.10
பூசணி ரூ.05
நாசிக் வெங்காயம் ரூ.07
சாம்பார் வெங்காயம் ரூ.25
மாங்காய் ரூ.10
பீர்க்கன்காய் ரூ.08
பாகற்காய் ரூ.15
காலிபிளவர் (ஒன்று) ரூ.10
பரங்கிகாய் ரூ.05
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.180
இந்தியன் ஆப்பிள் ரூ.88
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.92
நாக்பூர் ஆரஞ்சு ரூ.62
நாவல் ஆரஞ்சு ரூ.75
சாத்துக்குடி ரூ.27
கொய்யா ரூ.18
கருப்பு திராட்சை ரூ.30
பச்சை திராட்சை ரூ.60
கணேஷ் மாதுளை ரூ.32
காபூல் மாதுளை ரூ.45
செவ்வாழைப்பழம் ரூ.24
கற்பூரவள்ளி ரூ.14
ரஸ்தாளி ரூ.15
பச்சை வாழைப்பழம் ரூ.12
பப்பாளி ரூ.08
சப்போட்டா ரூ.17
கிரினி பழம் ரூ.10
தர்பூசணி ரூ.6.50
நேந்திரம் பழம் ரூ.22
பகனப்பள்ளி மாம்பலம் ரூ.25
செந்துரா மாம்பலம் ரூ.16
அல்போன்சா மாம்பலம் ரூ.40
அத்திப்பழம் ரூ.36
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.100
ஜாதி மல்லி ரூ.60
முல்லை ரூ.100
கனகாமரம் ரூ.200
சம்பங்கி ரூ.50
100 ரோஸ் ரூ.20
குயின் ரோஸ் ரூ.30
கோழி கொண்டை ரூ.25
வாடா மல்லி ரூ.25
செண்டு பூ ரூ.25
அரளி பூ ரூ.25
Webdunia
Publish Date: Mon, 09 Jun 2008 (10:20 IST)
Updated Date: Mon, 09 Jun 2008 (10:20 IST)