Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம், வெள்ளி விலை உயர்வு

தங்கம், வெள்ளி விலை உயர்வு
, சனி, 7 ஜூன் 2008 (15:16 IST)
மும்பையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.430 அதிகரித்தது. இரு தினங்களில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.865 அதிகரித்துள்ளது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.430ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.275‌ம் அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் வந்த தகவல்களினாலும், மொத்த வர்த்தகர்கள் அதிக அளவு தங்கம், வெளிளியை வாங்கியதால் விலை அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 900 டாலரை தாண்டியது.

1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 901.20/902.60 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 882.40/884.60 டாலர்).

பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 17.50/17.53 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 17.18/17.19 டாலர்).

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,570
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,510
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,680.

Share this Story:

Follow Webdunia tamil