Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைக‌ளி‌ல் ஏற்ற இறக்கம்

பங்குச் சந்தைக‌ளி‌ல் ஏற்ற இறக்கம்
, வியாழன், 5 ஜூன் 2008 (10:50 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது பங்கு விலைகள் அதிகரித்து இருந்தது. சிறிது நேரத்திலேயே நிலைமை மாறி குறியீட்டு எண்கள் குறைய துவங்கின். இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 95 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,611.95 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 24.15 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,609.75 ஆக இருந்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஹாங்காங் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது.

அமெரிக்கா பங்குச் சந்தையில் நாஸ்டாக் தவிர மற்றவை குறைந்தன. இதே போல் ஐரோப்பிய பங்குச் சந்தையில் குறியீட்டு எண்களும் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.25 மணி நிலவரப்படி 814 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 854 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 59 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 24.34 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,490.45 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5.30 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4590.90 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 27.74, சுமால் கேப் 26.47, பி.எஸ்.இ. 500- 13.77 புள்ளி குறைந்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,035.54 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,234.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.1,198.80 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,221.85 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.802.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.419.81 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.49,064.20 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 12.37, எஸ் அண்ட் பி 500- 0.45 புள்ளி குறைந்தது. ஆனால் நாஸ்டாக் 22.66 அதிகரித்தது.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்களும் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 87.60 புள்ளி குறைந்தது.

இன்று காலையில் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன.

ஹாங்காங்கின் ஹாங்செங் 113.40 புள்ளி அதிகரித்து இருந்தது.

ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 124.84, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 16.35, தென் கொரியாவினசியோலகாம்போசிட் 8.94, சீனாவின் சாங்காய் காம்போசிட் 34.39 புள்ளி குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil