Newsworld Finance Market 0806 04 1080604006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைக‌ளி‌ல் ஏற்ற இறக்கம்

Advertiesment
பங்குச் சந்தைக‌ளி‌ல் ஏற்ற இறக்கம்
, புதன், 4 ஜூன் 2008 (11:03 IST)
மும்பை : மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே இறக்கமாக உள்ளன.

காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 30.34 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,992.90 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 2.80 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,718.70 ஆக இருந்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சில பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று குறியீட்டு எண்கள் குறைந்தன. ஆனால் ஐரோப்பிய பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.15 மணி நிலவரப்படி 925 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 495 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 32 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 66 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,896.56 ஆக இருந்ததது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.95 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4700.95 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 20.91, சுமால் கேப் 41.51 புள்ளி அதிகரித்தது. அதே நேரத்தில் பி.எஸ்.இ. 500- 13.93 புள்ளி குறைந்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,900.14, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,920.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.1,020.70 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.980.14, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.717.65 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.262.49 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.47,865.39 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 143.57, நாஸ்டாக் 11.05, எஸ் அண்ட் பி 500- 8.02 புள்ளி சரிந்தது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 50.10 அதிகரித்தது.

இன்று காலையில் ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 150.01,சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 5.55, தென் கொரியாவினசியோலகாம்போசிட் 9.28 புள்ளி அதிகரித்தது.

அதே நேரத்தில் ஹாங்காங்கின் ஹாங்செங் 53.08, சீனாவின் சாங்காய் காம்போசிட் 88.22 புள்ளி குறைந்தது.

பெட்ரோல் விலை உயர்த்துவது தொடர்பாக முடிவு எடுக்க, இன்று மத்திய அமைச்சரவையின் கூட்டம் நடைபெறுகிறது. இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இதன் மீதான வரி குறைப்பு பற்றி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் இருக்கும். இதை பொறுத்து விலைகளில் மாற்றம் ஏற்படும்.

Share this Story:

Follow Webdunia tamil