Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிவு!
, செவ்வாய், 3 ஜூன் 2008 (18:20 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. காலை முதல் எல்லா பிரிவு பங்குகளின் விலையிலும் ஏற்ற இறக்கம் இருந்தது.

மதியம் 2.30 மணிக்கு பிறகு பங்குளின் விலையில் வேறுபாடு இருந்தாலும், சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. இறுதியில் காலையில் இருந்த நிலைமை இல்லாமல், முன்னேற்றம் காணப்பட்டது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் இருந்து இறுதி வரை, எல்லா சந்தைகளின் குறியீட்டு எண்களும் குறைந்து இருந்தன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் ஜெர்மனி தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ.-8.60 புள்ளி அதிகரித்தது.

இன்று மாலை வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 101 புள்ளிகளும், நிஃப்டி 24 குறைந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்100.62 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,962.56 ஆக குறைந்தது.


தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23.70 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,715.90 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 847 பங்குகளின் விலை அதிகரித்தது, 1818 பங்குகளின் விலை குறைந்தது, 57 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 36.89, சுமால் கேப் 77.22, பி.எஸ்.இ. 100-47.47, பி.எஸ்.இ. 200-11.45, பி.எஸ்.இ. 500- 39.97 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 41.90, சி.என்.எக்ஸ். ஐ.டி 49.35, பாங்க் நிஃப்டி 45.95, சி.என்.எக்ஸ்.100- 22.85, சி.என்.எக்ஸ். டிப்டி 37, சி.என்.எக்ஸ். 500- 21.90, சி.என்.எக்ஸ். மிட் கேப் 41.40, மிட் கேப் 50- 20.80 புள்ளி குறைந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,497.04 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,846.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.699.85 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.690.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.46,844.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 205.78, வாகன உற்பத்தி பிரிவு மட்டும் 11.84 புள்ளி அதிகரித்தது.

அதே நேரத்தில் நுகர்வோர் பொருட்கள் பிரிவு 287.50, மின் உற்பத்தி பிரிவு 74.54, ரியல் எஸ்டேட் 1.88, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 79.64, வங்கி பிரிவு 57.08, தகவல் தொழில் நுட்ப பிரிவு 68.26, உலோக உற்பத்தி பிரிவு மட்டும் 63.18 குறைந்தன.


தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 20பங்குகளின் விலை அதிகரித்தது, 30 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 21 பங்குகளின் விலை அதிகரித்தது, 29 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி. பிரிவில் உள்ள 20 பங்குகளில் 6 பங்குகளின் விலை அதிகரித்தது, 14 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 4 பங்கின் விலை அதிகரித்தது, 8 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 21 பங்குகளின் விலை அதிகரித்தது, 28 பங்குகளின் விலை குறைந்தது, 1 பங்கின் விலையில் மாற்றமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil