Newsworld Finance Market 0806 02 1080602004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை உயர்வு

Advertiesment
பங்குச் சந்தை உயர்வு
, திங்கள், 2 ஜூன் 2008 (11:00 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 146.13 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,561.70 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 31.15 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,901.25 ஆக உயர்ந்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது தென் கொரியா தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமையன்று டோவ் ஜோன்ஸ் தவிர பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தது. ஆனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சுவிட்சர்லாந்து, பிரிட்டன் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 15 புள்ளி குறைந்திருந்தது.

ஆசிய, அமெரிக்க பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு இருந்தாலும், இந்திய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக மாற்றத்துடன் உள்ளது. வங்கி பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.30 மணி நிலவரப்படி 1091 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 659 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 44 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 94.52 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,510.09 ஆக இருந்ததது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 15.35 புள்ளி உயர்ந்து குறியீட்டு எண் 4885.45 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 31.81, பி.எஸ்.இ. 500- 33.09, சுமால் கேப் 51.65 புள்ளி அதிகரித்தது.

வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.4,072.09, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,965.71 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.106.38 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,748.84 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,018.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.729.93 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.46,494.85 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 7.90 புள்ளி குறைந்தது. நாஸ்டாக் 14.34, எஸ் அண்ட் பி 500- 2.12 புள்ளி அதிகரித்தது.

இன்று காலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 310.40, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 81.68, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 12.24, சீனாவின் சாங்காய் காம்போசிட் 19.48 புள்ளி அதிகரித்து இருந்தது.

ஆனால் தென் கொரியாவினசியோலகாம்போசிட் 10.23 புள்ளி குறைந்து இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil