Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
, வியாழன், 29 மே 2008 (11:20 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் அதிகரித்தன. தேசிய பங்குச் சந்தையிலும், மும்பை பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

ஆனால் கால் மணிநேரத்திலேயே பங்கு விலைகள் குறைந்து குறியீட்டு எண்கள் குறைய தொடங்கின. எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 47 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,572.48 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 17 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,935.15 ஆக உயர்ந்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சீனா தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தது. ஆனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 11.10 புள்ளி உயர்ந்தது.

ஆசிய, அமெரிக்க பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு இருந்தாலும், இந்திய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக மாற்றத்துடன் உள்ளது. நேற்று இருந்த மாதிரியே, பங்குகளின் விலைகள் அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.30 மணி நிலவரப்படி 1250 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 735 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 60 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 0.47 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,525.84 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 2.20 புள்ளி உயர்ந்து குறியீட்டு எண் 4920.55 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 48.47, பி.எஸ்.இ. 500- 15.88, சுமால் கேப் 42.83 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,184.92, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,068.15 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.883.23 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,382.65 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.854.87 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.527.98 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.45,323.61 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 45.68, நாஸ்டாக் 5.46 புள்ளி அதிகரித்தது.

இன்று காலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 63.86, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 372.77, தென் கொரியாவினசியோலகாம்போசிட் 30.07, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 17.99 புள்ளி அதிகரித்து இருந்தது.

ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 11.38 புள்ளி குறைந்து இருந்தது.

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதா அல்லது இதன் மீது விதிக்கப்படும் வரிகளை குறைப்பதா என்பதில் பெட்ரோலிய அமைச்சகத்திற்கும், நிதி அமைச்சகத்திற்கும் இடையே பிரச்சனையில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இன்று இது குறித்து ஆலோசிக்க அமைச்சர்களின் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதன் முடிவுகளை பொறுத்தே பங்குச் சந்தையின் போக்கு இருக்கும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் முன்பேர சந்தையில் மே மாதம் கணக்கு முடிப்பதற்கு இன்று கடைசி நாள். இதை பொறுத்தும் பங்குகளின் விலையில் மாற்றங்கள் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil