Newsworld Finance Market 0805 28 1080528015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் அதிகரித்தன. தேசிய பங்குச் சந்தையிலும், மும்பை பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

ஆனால் கால் மணிநேரத்திலேயே பங்கு விலைகள் குறைந்து குறியீட்டு எண்கள் குறைய தொடங்கின. எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,330.81 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,869.40 ஆக உயர்ந்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தது. ஆனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 11 மணி நிலவரப்படி 879 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,269 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 65 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 10.88 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 16,264.71 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 08.45 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4851.35 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 9.84, பி.எஸ்.இ. 500- 11.32, சுமால் கேப் 27.92 புள்ளி குறைந்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,252.41 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,749.02 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.496.61 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,259.46 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.729.77 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.529.69 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.44,440.39 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 68.72, நாஸ்டாக் 36.57, புள்ளி அதிகரித்தது.

இன்று காலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 78.94, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 187.46, தென் கொரியாவினசியோலகாம்போசிட் 17.90 புள்ளிகள் குறைந்து இருந்தது.

ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 11.10, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 0.51 புள்ளி அதிகரித்து இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil