Publish Date: Tue, 27 May 2008 (14:59 IST)
Updated Date: Tue, 27 May 2008 (14:59 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கம், வெள்ளியின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன.
இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95 அதிகரித்தது. அதே போல 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.85 உயர்ந்தது. நகை தயாரிப்பாளர்கள் அதிக அளவில் தங்கம், வெள்ளி வாங்கியதால், இந்த அளவிற்கு விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 925.30/ 927.50 ஆக இருந்தது. இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 18.27/ 18.31 டாலராக இருந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,930
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,880
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,050